காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் நவ., 8ல் சூரசம்ஹாரம்
ADDED :4387 days ago
மோகனூர்: காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், நவம்பர், 8ம் தேதி, சூரசம்ஹார விழா கோலாகலமாக நடக்கிறது. மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா, கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த, 3ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை, 6 மணிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஸ்வாமி புறப்பாடும் நடந்து வருகிறது. நவம்பர், 8ம் தேதி காலை, 10 மணிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை, 5 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா வந்து, சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. நவம்பர், 9ம் தேதி, மாலை,4 மணிக்கு, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.