ஐயப்ப ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4387 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, ஜெகதேவி பால முருகன் கோவில் அருகே, ஐயப்பன் கோவில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நாளை (நவ.,7) நடக்கிறது. இதனையொட்டி, இன்று காலை, 6 மணிக்கு அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமம், 9 மணிக்கு கோ பூஜையும், இரவு, 9 மணிக்கு எந்திர பிரதிஷ்டை நடக்கிறது. நாளை காலை, 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பிம்பரக்ஷாபனம் மற்றும் இரண்டாம் கால பூஜை நடக்கிறது. காலை, 8 மணிக்கு விமான மஹா கும்பாபிஷேகம் மற்றும், 9 மணிக்கு ஸ்வாமி ஐயப்பனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.