ஐயப்பன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :4348 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி ஐயப்ப ஸ்வாமி கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் (நவ.,6) காலை, 6 மணிக்கு அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமம், 9 மணிக்கு கோ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு, 9 மணிக்கு இயந்திர பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பிம்பரக்ஷாபனம் மற்றும் இரண்டாம் கால பூஜை நடந்தது. காலை, 8 மணிக்கு விமான மஹா கும்பாபிஷேகம் மற்றும், 9 மணிக்கு ஸ்வாமி ஐயப்பனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் நூற்றுக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, 10 மணிக்கு அஷ்டாபிஷேகம், மஹா தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.