மேலும் செய்திகள்
பெரியஅரவங்குறிச்சியில் புரவி எடுப்பு
4335 days ago
நால்வர் இசைத்தமிழ் ஆராதனை அவிநாசி கோவிலில் கோலாகலம்
4335 days ago
அங்காள பரமேஸ்வரி கோவில் 64வது ஆண்டு நவராத்திரி விழா
4335 days ago
நாகை: சிக்கல் கிராமத்தில் உள்ள நவநீதேஸ்வரர் கோவிலில் முருகன் சிங்காரவேலர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சன்னதிகொண்டுள்ள வேல்நெடுங்கண்ணி அம்மன் கொடுத்த சக்தி வேலால் தான் முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்காரம் செய்ததாக கந்தபுராணங்கம் கூறுகிறது. ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி பெருவிழாவில் சிங்காரவேலர், வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச் செல்லும் உற்சவம் நடைபெறும். அம்மனிடம் இருந்து சக்திவேலை பெறும்போது முருகனாகிய சிங்காரவேலரின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வைத்துளி சிந்தும். இந்த அற்புத காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சிக்கலில் கூடுவார்கள். அதேபோல இந்த ஆண்டுக்கான சக்தி வேல் வாங்கும் உற்சவம் இன்று சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் நடைபெற்றது. முன்னதாக காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
4335 days ago
4335 days ago
4335 days ago