கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தாரகாசூரன் வதம்
ADDED :4383 days ago
கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை முருகப்பெருமான் தாரகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் மட்டுமே தாரகாசூரன் வதம் நடைபெறும். இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து, கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கழுகாசலமூர்த்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் முருகன் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.