கன்னியாகுமரி முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்
ADDED :4452 days ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் சூரசம்ஹாரம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. வேளிமலை குமாரகோவில், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவில், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னிதி, கன்னியாகுமரி முருகன்குன்றம் முருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சூரனை வதம் செய்வதற்காக சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.