உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம்!

பழநி கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம்!

பழநி: பழநி கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரன் வதம் நடந்தது. பழநிமலைக்கோயிலில், நவ., 3 ல் காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு படையல் நைவேத்தியம் நடந்தது. பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்து. சின்னக்குமார சுவாமி, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி, புறப்பட்டவுடன் சன்னதி நடைசாத்தப்பட்டது.திருஆவினன்குடியில், பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்குகிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி மலைக்கோயிலுக்கு புறப்படாகி, சம்ப்ரோட்சனம் பூஜைக்கு, பின் அர்த்தஜாமம் பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !