சபரிமலை விழா: திருவல்லாவில் 10 ரயில்கள் நிற்கும்!
ADDED :4350 days ago
சபரிமலை கோயில் விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, கேரள மாநிலம், திருவல்லா ரயில் நிலையத்தில், 10 ரயில்கள், இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வாராந்திர ரயில், நவ., 16-19 வரை; திப்ரூகார் (அசாம்)-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், நவ., 16-ஜன.,18 வரை; கொச்சுவேலி (கேரளா) - டேராடூன் (உத்தரகண்ட்) எக்ஸ்பிரஸ் ரயில், நவ., 15-ஜன,. 20 வரை; யஷ்வந்த்பூர் (கர்நாடகா) - கொச்சுவேலி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், நவ.,14-ஜன., 20 வரை; கண்ணூர் (கேரளா) -திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (வாரம், ஐந்து நாட்கள்), நவ.,14-ஜன., 21 வரை திருவல்லா ரயில் நிலையத்தில், இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். இவ்வாறு, தெற்கு ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.