தலசயனப் பெருமாள் கோயிலில் தேர் திருவிழா
ADDED :4348 days ago
மாமல்லபுரம்: தலசயனப் பெருமாள் கோயிலில் தேரோட்ட திருவிழா நேற்று நடைபெற்றது. நான்கு மாடவீதிகளில் ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். 4 மணி நேரத்திற்கு பிறகு, தேர் நிலைக்கு வந்தடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.