உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர்களுக்கு மலிவு விலை சபரி சப்பாத்தி!

சபரிமலை பக்தர்களுக்கு மலிவு விலை சபரி சப்பாத்தி!

சபரிமலை: ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26-ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ம் தேதியும் நடைபெறுகிறது. நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு வழிகளில் சுத்தமான சைவ உணவு கிடைப்பதில்லை. இதற்காக புதிய ஏற்பாடாக திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாபுரா மத்திய சிறை கைதிகள் தயாரித்த சப்பாத்தி, குருமா மற்றும் பத்தனம்திட்டா சிறைகைதிகள் தயாரித்த இட்லி, சாம்பார் போன்றவைகளை சபரிமலைஅடிவாரத்திற்கு எடுத்து சென்று பக்தர்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டம் சபரி சப்பாத்தி என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. கேரளாவில் உள்ள 8 சிறைகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பத்தனம்திட்டா சிறையில் மட்டும் 70 சிறைக்கைதிகள் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !