மேலூரில் மழைவேண்டி பூஜை!
ADDED :4348 days ago
மேலூர்: மேலூர் மற்றும் பெரியாறு -வைகை அணைப்பகுதிகளில் மழை பெய்ய வேண்டி, அம்மன் கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது என, மேலூர் விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை தாமதித்து வருவதால், பாசனப் பகுதிகளில் நெற்பயிர் நீரின்றி வாடுகிறது. எனவே காலை 9 மணியளவில் மழை பெய்ய வேண்டி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட உள்ளன. இதில், அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என, அவர்கள் தெரிவித்தனர்.