ராஜராஜ சோழன் 1,028 வது சதயவிழா!
ADDED :4457 days ago
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தி்ல உள்ள பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,028வது ஆண்டு சதய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதை முன்னிட்டு நேற்று கோயிலில் உள்ள மூலவர் பெருவுடையார் திருமேனிக்கு 36 வகையான பேராபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில், விபூதி, மஞ்சள்பொடி, பல்வேறு வகையான மூலிகை பொடிகள், பால், பசுந்தயிர், பல்வேறு வகையான பழங்கள், சந்தனம் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.