மேலையூரில் கந்தசஷ்டி விழா நிறைவு
ADDED :4348 days ago
திருப்போரூர்: மேலையூர் நாகபரணீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா விடையாற்றி உற்சவத்துடன் நேற்று நிறைவடைந்தது.கடந்த, 3ம் தேதி துவங்கிய கந்தசஷ்டி விழா மற்றும் லட்சார்ச்சனை விழாவில், 8ம் தேதி சூரசம்ஹாரமும், 9ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் விமர்சையாக நடந்தது. இதையடுத்து விடையாற்றி உற்சவம் நேற்று நடந்தது. அதன்பின் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.