திருவண்ணாமலையில் 1008 சங்காபிஷேகம்
ADDED :4351 days ago
திருவண்ணாமலை: தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளில் மூலவர் அருணாசலேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சரவிளக்கு நந்தி அருகே 1008 சங்குகள் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.