வெங்கடேச பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உத்சவம் துவக்கம்!
ADDED :4402 days ago
திருவள்ளூர்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், திருப்பவித்ர உத்சவம் துவங்கியது. திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், உள்ளது. இக்கோவிலில், திருப்பவித்ர உத்சவம், துவங்கியது. மாலை, அனுக்ஞை, அங்குரார்பணம், வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதியுடன், விழா துவங்கியது. தினசரி, புண்யாஹவாசனம் அக்னி பிரதிஷ்டையும், திவ்ய பிரபந்த சாற்றுமுறை தீர்த்த பிரசாத விநியோகம் நடைபெறும. பவித்ர உத்சவ திருமஞ்சனம், தினசரி, காலை, 9 மணிக்கு நடைபெறும். வரும், 15ம் தேதி, விழா நிறைவு நாளன்று, மாலை, 5 மணியளவில், உத்சவர் புறப்பாடு நடைபெறும்.