விவேகானந்தர் ரத யாத்திரை
ADDED :4363 days ago
நாமக்கல்: நாமக்கல் ஆன்மிக ஹிந்து சமயப்பேரவை சார்பில், விவேகானந்தரின், 150வது பிறந்தநாள் ரத யாத்திரை, நாமக்கல்லில் நடந்தது. கோவை ஸ்ரீமத் தர்மாத்மானந்தவி மகராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணி, நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவையின் கவுரவ தலைவர் ஏகாம்பரம், ஆலோசனை குழு தலைவர் தனசேகர், சந்தைப்பேட்டைப்புதூர் பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா ஆறுமுகம், வக்கீல் மனோகரன், இளங்கோவன், பொன்கோவிந்தராஜ், மணி, வாசுசீனிவாசன், சவுந்தரபாண்டியன், நாமக்கல் ராமகிருஷ்ண ஆசிரம நிர்வாகி பூரண சேவ்ரத்தானந்த மகராஜ், ஏகாம்பரம், பேரவை பொறுப்பாளர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆன்மிக சொற்பொழிவில், விவேகானந்தர், ராமகிருஷ்ணர், சாரதாதேவி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டது.