உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாமாத்தூர் முத்தாம்பிகை கோயில் தேர் ரூ.42 லட்சத்தில் தயாராகிறது

திருவாமாத்தூர் முத்தாம்பிகை கோயில் தேர் ரூ.42 லட்சத்தில் தயாராகிறது

திருவாமாத்தூரில் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலின் தேர் பழுதடைந்து கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.  இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை ஒதுக்கீடு செய்த ரூ.10 லட்சம், பொதுமக்கள் பங்களிப்பு ரூ.32 லட்சத்துடன் தேர் தயாரிக்கும் பணி கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வருகிறது.  மேலும், பெல் நிறுவனம் அளித்த ரூ.2.60 லட்சத்தில் தேரின் சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !