உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்குடி: காரைக்குடி செக்காலையில் சந்தானகணபதி, சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,வாஸ்து பூஜை நடந்தது.நேற்று காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தொடர்ந்து லெட்சுமி,கோ பூஜை நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான விமான கும்பாபிஷேகம் காலை 9.25க்கும், மூலவர் கும்பாபிஷேகம் 9.40க்கும், தொடர்ந்து மகாபிஷேகம் நடந்தது.பிள்ளையார் பட்டி தலைமை குருக்கள் பிச்சை குருக்கள், அர்ச்சகர் வைரவசாமி குருக்கள், வெங்கடேச குருக்கள் சர்வசாதகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !