உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலங்களில் வசிப்பதற்கான நிபந்தனை: குத்தகைதாரர்கள் வழக்கு!

கோவில் நிலங்களில் வசிப்பதற்கான நிபந்தனை: குத்தகைதாரர்கள் வழக்கு!

சென்னை: சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு இந்து கோவில் வீட்டுமனை குத்தகைதாரர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் கே.லோகநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நாங்கள் இந்து கோவில் நிலங்களில் குத்தகை எடுத்து, கடந்த 70 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2004, 2005–ம் ஆண்டுகளில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், குத்தகை பெயர் மாற்றுவதற்கு விண்ணப்பிப்பவர்களிடம் சில நிபந்தனைகளை வலியுறுத்துவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 10 மாத வாடகையை நன்கொடையாக கோவிலுக்கு வழங்க வேண்டும், குடியிருப்பு கட்டிடங்களை கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும், குத்தகை ஒப்பந்தத்தை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை விதிக்கின்றனர். இது நியாயமற்றது. கோவில் நிலங்களில் நாங்கள் என்றுமே உரிமை கோரியதில்லை. நியாயமான வாடகையை கொடுத்து வருகிறோம். எனவே அந்த அரசாணையை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி கே.கே.சசீதரன் விசாரித்தார். இந்த மனுவுக்கு இந்துசமய அறநிலையத் துறை செயலாளர், கமிஷனர் பதிலளிக்கும்படி நோட்டீசு பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !