உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேரன்மகாதேவி கோயிலில் கார்த்திகை தீப விழா

சேரன்மகாதேவி கோயிலில் கார்த்திகை தீப விழா

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி கொளுந்துமாமலை கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மலை உச்சியில் தீபம் ஏற்றும் விழா கோலாகலமாக நடந்தது. சேரன்மகாதேவி கொளுந்துமாமலை கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது திருக்கார்த்திகை திருவிழாவாகும். திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து மாலை 5.50 மணிக்கு கொளுந்துமாமலை உச்சியில் அண்ணாமாலை, உண்ணாமுலையம்மாள் என இரண்டு தீபம் ஏற்றப்பட்டு பாலசுப்பிரமணியருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. கொளுந்துமாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும் சுற்று வட்டார பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி பாலசுப்பிரமணியசுவாமியை வழிபட்டனர்.ஏற்பாடுகளை நெல்லை கோளாநாதசுவாமி ஆதீனம் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !