உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சொக்கப்பனை தீபம்

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சொக்கப்பனை தீபம்

நாகர்கோவில்: நாகராஜா கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருக்கார்த்திகையையொட்டி, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின் இரவு 7.45 மணிக்கு கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க, பூப்பந்தல் வாகனத்தில் அனந்தகிருஷ்ணன் சுவாமியுடன் பாமா, ருக்மணி அம்பாள் ரத வீதியில் எழுந்தருளினார். பின் சொக்கப்பனைக்கு பூஜைகள் நடைபெற்று, தீபம் ஏற்றப்பட்டது.  இதேபோல் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமாரகோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !