உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீபம்

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீபம்

எளம்பலூர்: பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம்  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 31வது ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜையும், 210 சித்தர்கள் யாகமும் நடைபெற்றது. அதைதொடர்ந்து, பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் செம்பு கொப்பறை, திரி, நெய் ஆகியவை வைக்கப்பட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து, புதுவை பூதகன வாத்தியம் மற்றும் சென்னை சிவலோக சிவனடியார்களின் தேவார பாடல் இசையுஅங்குள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், பிரம்மரிஷி மலையின் மேல் செம்பு கொப்பறை வைக்கப்பட்டு 210 மீட்டர் நீளமுள்ள திரி மற்றும் 300 கிலோ நெய் கொண்டு, மாலை 6 மணியளவில் மகாசித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை சித்தர் எஸ். ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !