உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் தீபவிழா

வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் தீபவிழா

திருவண்ணாமலை: வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1500 அடி உயரமுள்ள தவளகிரி மலைமீது கார்த்திகை தீபத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.   பின்னர் தவளகிரீஸ்வரர் கோயில் மற்றும் விநாயகர் கோயில் மீது அமைக்கப்பட்டிருந்த தனித்தனி கொப்பரைகளில் தலா 75 கிலோ நெய் நிரப்பப்பட்டு மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !