சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பாஞ்சராத்ர தீப விழா!
ADDED :4422 days ago
பரமக்குடி: கார்த்திகை தீப விழாவையொட்டி, பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில், பிரியாவிடையுடன் சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில் வீதிவலம் வந்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், தரைப்பாலம் அருகில் உள்ள முருகன் கோயிலில், முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் காட்சியளித்தார். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பாஞ்சராத்ர தீபவிழா கொண்டாடப்பட்டது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அருள்பாலித்தார். நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் சுவாமிபிரியாவிடையுடன் வீதிவலம் வந்தார். கோயில் எதிரில் உள்ள சந்தியாவந்தன மண்டபத்தில், மகாநாகதீபம் ஏற்றப்பட்டது.