சபரிமலை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள.. இணையதளத்தில் 70 மொழிகள்!
ADDED :4349 days ago
சபரிமலை: சபரிமலை பற்றிய விபரங்களை, 70 மொழிகளில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகர் மோகன்லால் தொடங்கி வைத்தார். "www.sabarimalaayyappa.com என்ற இணையதளத்தில், "லாக் ஆன் செய்தால் சபரிமலை தொடர்பான விபரங்கள், புகைப்படங்களை பார்க்கலாம். பொதுவாக, இணையதளத்தில் ஒரே மொழிதான் இருக்கும். சபரிமலை இணைய தளத்தில், 70 மொழிகளில் விபரங்கள் உள்ளன. விரும்பிய மொழியை தேர்வு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. "தத்வமசி கம்யூனிகேஷன் வடிவமைத்துள்ள இணையதளத்தின் காப்பாளராக, தந்திரி கண்டரரு ராஜீவரு; தலைவராக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ராமன்நாயர் இருப்பர். சபரிமலை வரலாறு மற்றும் விழா விபரங்கள், இதில் உள்ளன.