திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தெப்பல் விழா!
ADDED :4345 days ago
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் 3 நாள் தெப்பல் விழா நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான நேற்றுமுன்தினம் இரவு கோவில் அருகே உள்ள ஐயங்குளத்தில் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி குளத்தை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த நிலையில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் நேற்று காலையில் கிரிவலம் செனறனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.