அவிநாசி கோவிலில் சங்காபிஷேக பூஜை
ADDED :4345 days ago
கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில், 108 வலம்புரி சங்குகள் லிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு, வேத பாராயணம் மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது. மகா பூர்ணாஹூதிக்கு பின், வலம்புரி சங்குகள் பிரகார உலாவாக எடுத்துச் செல்லப்பட்டு, அவிநாசியப்பருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்துக்கு பின், விசேஷ பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்காபிஷேக பூஜையை கோவில் சிவாச்சாரியார்கள் சிவக்குமார், தியாகராஜன், அர்விந்தாக்ஷன், செங்கோட்டுவேல் ஆகியோர் மேற்கொண்டனர்.