கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ரூ. 11 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :4353 days ago
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் மொத்தம் 17 திருப்பணி உண்டியல்கள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருதடவை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுகிறது. புதன்கிழமை காலை 10 மணிக்கு இணை ஆணையர் இரா.ஞானசேகர் தலைமையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. உதவி ஆணையர் அருணாச்சலம், முதுநிலை கணக்கர் இங்கர்சால், பத்மநாபபுரம் தேவஸம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதியம்மன் கோவில் மேலாளர் சோனாச்சலம், கணக்காளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ரூ. 11 லட்சத்து 42 ஆயிரத்து 656, தங்கம் 10 கிராம், வெள்ளி 19 கிராம் மற்றும் மலேசியன் ரிங்கிட், சிங்கப்பூர் டாலர், சவுதி ரியால் ஆகியவை உண்டியல் வசூலாக கிடைத்தது.