உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடிஅண்ணாமலையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

அடிஅண்ணாமலையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் உள்ளது அடி அண்ணாமலை. இங்கு மெயின் ரோட்டில் உள்ள மாரியம் மன் கோவிலில் இரும்பால் செய்யப்பட்ட உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.  நேற்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கைபோட பார்த்த போது உண்டியலை காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருவண் ணாமலை தாலுகா போலீ சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தினர்.  உண்டியல் உடைக் கப்பட்டு கிடந்தது. மர்ம நபர் கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டி யலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !