பெருங்கரை பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4352 days ago
பந்தலூர் தாலுகா உப்பட்டி பெருங்கரை கிராமத்தில் பால முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை நடை பெற்றது. பின்னர் 8 மணிக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. இதையடுத்து, காலை 9 மணிக்கு கொடி ஏற்று விழா வும், அதனை தொடர்ந்துசிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 17-ந் தேதி காலை 6 மணி முதல் பல்வேறு பூஜைகள் நடை பெற்றன. பின்னர் மாலை 3 மணிக்கு புனித நீர் எடுத்து ஊர்வலமாக வருதலும், மாலை 6 மணிக்கு கணபதி வழிபாடு நிகழ்ச்சியும் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து தீபாராதனைகள், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சிறப்பு தீபா ராதனை நடைபெற்றது.