உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவில் பாதுகாப்பிற்காக 32 இடங்களில் நவீன கேமரா

தஞ்சை பெரியகோவில் பாதுகாப்பிற்காக 32 இடங்களில் நவீன கேமரா

தஞ்சை: பெரியகோவிலில் தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:– தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன்கோபுரத்தின் நுழைவு வாயிலில் மேல்பகுதியில் உள்ள தூணில் விரிசல் ஏற்பட்டது குறித்தும், மழைநீர் ஒழுகுவது குறித்து தொல்லியல் துறையின் சார்பில் 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டனர். மழைநீர் ஒழுகுவதை சரி செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் இது முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் இங்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தொல்லியல் துறை சார்பில் நவீன கேமரா பொருத்தப்பட உள்ளது. சென்னை வட்டத்தில் முதன் முதலாக இந்த கோவிலில் தான் கேமரா 32 இடங்களில் பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !