ராமேசுவரம் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை!
ADDED :4351 days ago
ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல் கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலமாக மாதம் ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கிடைக்கிறது. இதுதவிர தீர்த்த கட்டணம், அர்ச்சணை, தரிசன கட்டணம் என பல வகையிலும் வரும் வருமானங்களையும் சேர்த்தால் ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ.1 கோடிக்கும் மேல் கிடைக்கும் என்று கூறப் படுகிறது. கோவிலுக்கு அதிக வருமானம் கிடைத்தும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதேபோல பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியோ, கடலில் நீராடும் பக்தர்களுக்கு உடை மாற்றும் அறையோ இது வரையிலும் ஏற்படுத்தப்பட வில்லை. மாறாக பக்தர்கள் அவதிக்கும், அச்சுறுத்தலுக் கும் உள்ளாகி உள்ளனர்.