சபரிமலையில் ரஷ்ய பக்தர்கள் தரிசனம்
ADDED :4351 days ago
கருப்பு வேட்டி, துண்டு அணிந்து, சரண கோஷங்களுடன் ரஷ்யாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் 14 பேர், ஐயப்பனை மனமுருக வேண்டி, தரிசனம் செய்தனர். ரஷ்யாவின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற இடத்தைச் சேர்ந்தவர் இலியா படுகோவா. தனது பெயரை, இந்துசூடன் என்று மாற்றிக் கொண்ட இவர், அங்கு ஆயுர்வேத டாக்டராக உள்ளார். இவர், கடந்த 15 ஆண்டுகளாக சபரிமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இவர் தலைமையில் 14 ரஷ்யர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து வந்துள்ள இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் அதிபர்களும், மாணவர்களும் ஆவர்.