பந்தளம் மன்னர் பிரதிநிதியாக திலிப் வர்மராஜா தேர்வு!
ADDED :4349 days ago
சபரிமலை: திருவாபரண பவனியில் பந்தளம் மன்னர் பிரதிநிதியாக வருவதற்கு திலிப்வர்மா ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜன.,12-ம் தேதி பந்தளம் அரண்மனையிலிருந்து சபரிமலைக்கு திருவாபரணபவனி புறப்படும். இந்த பவனியுடன் மன்னர் பிரதிநிதியாக அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் வருவது மரபு. இதற்காக பந்தளம் வலிய தம்புரான் ரேவதி திருநாள் ராமவர்மா ராஜாவின் பிரதிதியாக திலிப்வர்மா ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன் முறையாக இவர் மன்னர் பிரதிதியாக சபரிமலை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.