உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்யசாயி பாபா பிறந்த நாள் விழா!

சத்யசாயி பாபா பிறந்த நாள் விழா!

வால்பாறை: சத்யசாயி சேவா சமிதி சார்பில், சத்யசாயி பாபாவின் 88வது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, பஜனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் துளசியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நாளை (23ம் தேதி) காலை 5.00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு திருக்கொடி ஏற்றப்படுகிறது. காலை 10.00 மணிக்கு பஜன், காலை 11.00 மணிக்கு அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பால், ரொட்டி, பிரசாதம் வழங்கப்படுகிறது. பகல் 12.00 மணிக்கு ஆதிவாசி பள்ளி மாணவர்களுக்கு நாராயணசேவை (மதிய உணவு) பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 3.00 மணிக்கு சத்யசாயி, பால விஹால் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலை 4.00 மணிக்கு விளக்குபூஜையும், 5.00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு பஜன் மஹாதீபாராதனை, மங்கள ஆர்த்தி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, வால்பாறை சத்யசாயிசேவா சமிதி பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !