கோவில் திருப்பணி நிதி வழங்கல்
ADDED :4348 days ago
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் இல்லாத, சிறிய கோவில்களாக உள்ள, ஆதிதிராவிடர் பகுதி மற்றும் கிராம கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள, தலா 50 ஆயிரம் ரூபாய் அறநிலையத்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிது. ஆதிதிராவிடர் கோவில்கள் 31; கிராம கோவில்கள் 28 என 59 கோவில்களுக்கு 29.5 லட்சம் ரூபாய் நிதி வழங்க அனுமதியளிக்கப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆனந்த், திருப்பணி குழு மற்றும் பொறுப்பாளர்களிடம் நேற்று நிதி வழங்கினார்.