நான்குநேரியில் ராமானுஜ ஜீயர் சுவாமி நட்சத்திர மஹோத்ஸவம்
நான்குநேரி: நான்குநேரியில் கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமியின் 82வது திரு நட்சத்திர மஹோத்ஸவம் நடக்கிறது. நான்குநேரியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், 8 சுயம்பு ஸ்தலங்களில் முதன்மையானது நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில். இங்கு வானமாமலை மடத்தின் 30வது பட்டத்தில் இருப்பவர் கலியன் வானமாமலை ஜீயர் சுவாமிகள். இவருடைய 82வது திருநட்சத்திர மஹோத்ஸவம் நாளை (26ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோயிலில் நேற்று காலை ஷரிவாயு ஸமித்தில் இருந்து 1000 போர் ஸ்துதி செய்தனர். மாலை 6 மணிக்கு குறுங்குடி வைதேகியின் திருமால் பெருமை பரதநாட்டிய நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு ஸ்ரீராம் குழுவினரின் கர்நாடக இன்னிசை கச்சேரியும் நடந்தது. இன்று (25ம்தேதி) காலை 10 மணிக்கு ஸ்ரீமத் பரமஹம்ஸ கலியன் வானமாமலை ஜீயர் சுவாமிகள் ஸ்ரீமத் பரமஹம்ஸ பேரருளான ராமானுஜ ஜீயர் சுவாமி திருக்குறுங்குடி ஸ்ரீமத் பரமஹம்ஸ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி ஆழ்வார்திருநகரி, ஸ்ரீமத் பரமஹம்ஸ ராமசந்திர ராமானுஜ ஜீயர் பீமவரம் ஆகியோர் கலந்து கொள்ளும் வித்வத் ஸதஸ் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு சுதர்ஸன ஹோமபூர்வாங்கம் மற்றும் உ.வே .இளையவல்லி ராமஐயங்கார் சுவாமிகளின் உபன்யாசமும், மாலை 7 மணிக்கு கண்டசாலி பவன்குமார் குழுவினரின் பாமா கலாபம் தசாவதாரம் நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (26ம்தேதி) காலை 5 மணிக்கு மகா சுதர்சன ஹோமமும், 8.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 9 மணிக்கு எண்ணெய் காப்பு 10.30 மணிக்கு பாதபூஜை நிகழ்ச்சியும் 11.30 மணிக்கு சாற்றுமுறை, 12 மணிக்கு திவ்ய தேச பிரசாத மரியாதைகளும், 1 மணிக்கு ததீயாராதனம், மாலை 6 மணிக்கு வரமங்கா கோதா ஸமேத தெய்வநாயகப் பெருாள் சந்திரப்பிரபையில் புறப்பாடு கண்டருளல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு ஸ்ரீமத் பரமஹம்ஸ கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத் பரமஹம்ஸ ராமசந்திர ராமானுஜ ஜீயர் சுவாமிகள் செய்து வருகின்றனர்.