உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகிரி கோயிலில் கார்த்திகை தீப விழா

சிவகிரி கோயிலில் கார்த்திகை தீப விழா

சிவகிரி: சிவகிரி இலக்னேஸ்வரர் காந்தேஸ்வரியம்மன் சமேதர கோயிலில் கார்த்திகை தீபவிழா கொண்டாடப்பட்டது. இக்கோயில் மதியம் மூலவர் உட்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பால், நெய், தயிர், பன்னீர், கரும்புச்சாறு, இளநீர், உட்பட 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பொங்கல், புளியோதரை, சுண்டல் பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களான பைரவர், துர்க்கையம்மன், விநாயகர், முருகனுக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் முன் சொக்கபனை கொளுத்தப்பட்டது பின்பு தட்டுச்சப்பரத்தில் இலக்னேஷ்வரர் சமேதரர் எழுந்தருளி காட்சி கொடுத்தார் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நட்சாடலிங்கம், நடராஜன், திருஞானம் கோயில் பூசாரி அய்யாத்துரை மற்றும் நிர்வாகிகள் குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !