ஈஸ்வரன் கோவில்களில் கால பைரவருக்கு பூஜை
சேலம்: சேலத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில், கால பைரவாஷ்டமி மகா யாக பூஜை நடந்தது. * சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், கால பைரவர் வழிபாட்டுக்குழு சார்பில், நேற்று கால பைரவாஸ்ஷ்டமி மகாயாக பூஜை நடந்தது. நேற்று, காலபைரவருக்கு விசேஷ அலங்கார பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்திருந்த, 108 விதமான மூலிகைகள் பூஜை செய்யப்பட்டு, யாக பூஜையில் விடப்பட்டது. கால பைரவரை வழிபட நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
* சேலம், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, 108 கலச பூஜைகளை வைத்தும், 108 மூலிகை பொருட்களுடன் ஹோமம் நடந்தது. முன்னதாக, கால பைரவருக்கு விசேஷ பூஜைகள், அலங்காரம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு கால பைரவருக்கு அபிஷேகம் மற்றும் ஸ்வர்ண அலங்காரம் நடந்தது. இரவு சமஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
* சேலம், காசி விஸ்வநாதர் கோவிலில், கால பைரவர் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. காசி விஸ்வநாதர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 108 மூலிகைகளை வைத்து, விசேஷ யாக பூஜை நடந்தது. சேலம் நகரில் உள்ள அனைத்து ஈஸ்வரன் கோவில்களிலும், கால பைரவருக்கு மகா யாக பூஜைகள் நடந்தன.