உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் கோவில் மார்கழி திருவிழா!

சுசீந்திரம் கோவில் மார்கழி திருவிழா!

சுசீந்திரம்: தாணுமாலைய சுவாமி கோவில் மார்கழி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சுசீந்திரம் கோவில் மார்கழி திருவிழா டிச.  9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச. 17-ஆம் தேதி தேர் திருவிழாவையொட்டி அன்று மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கவும், டாஸ்மாக் கடைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்களில் வீதி உலா வரும் உற்சவ வாகனத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணங்களை கருவூல அறையில் இருந்து எடுத்து சுவாமிக்கு அணிவித்து, மீண்டும் திருவிழா முடிந்ததும் கருவூல அறையில் வைக்கும் வரை அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் உடனிருந்து கண்காணிக்க வேண்டும் என வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !