உலக நன்மைக்காக நெல்லிமர பூஜை!
ADDED :4339 days ago
போளூரை அடுத்த அத்திமூர் மோழைபிள்ளையார் கோவில் அருகில் ஆரியவைஸ்ய சமாஜம் சார்பில் நெல்லிமரபூஜை, வனபோஜனம் நடந்தது. சுமங்கலி பெண்கள் நெல்லி மரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவித்து பார்வதி தேவியாக வழிபட்டனர்.