வழிபாட்டுக்கு நேரம் எப்படி ஒதுக்க முடியும்?
ADDED :4492 days ago
காலையில் நீராடியதும் ஒரே ஒரு நிமிடத்தைக் கூடவா வழிபாட்டுக்காக ஒதுக்க முடியவில்லை! அருணகிரிநாதர், இன்னும் சுருக்கமாக அரைநிமிடம் ஒதுக்கினால் கூட போதும் என சொல்கிறார். சரணகமலாலயத்தில் அரைநிமிஷ நேரமட்டில் தவமுறை தியானம் வைத்தால் போதும் என்கிறது திருப்புகழ். நேரமில்லை என்று சொல்லவே சொல்லாதீர்கள்.