புத்தர் பிறப்பில் புதிய தகவல்!
ADDED :4339 days ago
காத்மாண்டு: நேபாளத்தில் புத்தர் பிறந்த இடத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் ஒரு பழமையான கோவிலின் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு குறித்து ஆய்வு செய்ததில், அது, 6ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. இதன் அடிப்படையி்ல் கணக்கிடும் போது, புத்தர் பிறந்ததாக கூறப்படும் காலத்திற்கும் இரு நூற்றாண்டுகள் முன்னதாகவே அவர் பிறந்திருக்க கூடும் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.