திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் காலபைரவாஷ்டமி!
ADDED :4434 days ago
திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபக்சம், சுக்லபக்சம் கூடிய அஷ்டமி திதியில் பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் வரும் காலபைரவாஷ்டமியின்போது விசேஷ அபிசேக, ஆராதனைகள் செய்யப்படும். அதன்படி பைரவருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ அபிசேகம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.