சுர்ணபுரீஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமி
ADDED :4437 days ago
ஆக்கூர்: செம்பனார்கோவில் மருவார்குழலி உடனாகிய சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமி விழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து 11 கலச பூஜை நடந்தது. தொடர்ந்து உலக நலனுக்காகவும், உலகில் பக்திதழைத்தோங்கவும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படாமல் இருக்கவும் வேண்டி கணபதியாகம், லெட்சுமியாகம், நவக்கிரகயாகம், சுதர்சனயாகம், பைரவர்யாகம், ருத்ரயாகம், உள்ளிட்ட சிறப்பு யாகம் நடந்தது.