சுவாமிமலை கோவிலில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் நவீன கருவிகள்!
ADDED :4339 days ago
கும்பகோணம்: சுவாமிமலை கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடத்திட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29–ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நவீனப்படுத்திட ஏதுவாக 2 மெட்டல் டிடெக்டர் நுழைவுவாயில் கருவியும், நான்கு வாக்கி டாக்கி கருவிகளும் சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில வாங்கப்பட்டுள்ளது. கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது வாக்கி டாக்கி மூலம் பணியாளர்களுக்கு தகவல் கொடுத்து அதற்கு ஏற்றவாறு பக்தர்கள் கூட்டத்தினை நெரிசல் இல்லாமல் தரிசனத்திற்கு அனுப்ப முடியும். அதே போல் கோவிலுக்கு வரும் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னர் தான் தரசனத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.