உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றுதோறாடல் எங்கிருக்கிறது?

குன்றுதோறாடல் எங்கிருக்கிறது?

முருகப்பெருமானுக்குரிய சிறப்பான தலங்களை அறுபடைவீடுகள் என்பர். அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை. இப்படி முருகனுக்கு உகந்த தலங்களின் வரிசையில் குன்றுதோறாடலும் இடம்பெறுகிறது. குன்றுதோறாடல் என்று தனியாக முருகனின் தலம் ஏதும் இல்லை. குன்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் குமரப்பெருமான் ரூபமாகவோ, அரூபமாகவோ இருக்கிறான் என்பதே இதன் பொருளாகும். இதனையே அருணகிரிநாதர்  திருப்புகழில், பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே என்று போற்றுகிறார். நமக்குள் இருக்கும் அகவுலமாகிய மனதில் பக்தி என்னும் குன்றில் ஏறிச் சென்றால் குமரப்பெருமானைத் தரிசிக்கலாம் என்பதே முருகனடியார்கள் வாழ்வில் கண்ட உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !