சத்திய சாய்பாபா பிறந்தநாள் விழா
ADDED :4339 days ago
விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் சத்யசாய்பாபா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விளாத்திகுளம் சத்தியசாய் சேவா சமிதியின் சார்பாக சத்தியசாய்பாபா 88வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் ஓம் காரம் 1008 சங்கர நாம அர்ச்சனை சாய் சரித்திரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சாய்பாபா குறித்தும், அவதாரங்கள் குறித்தும் கயத்தார் வீரபாண்டி, முத்துலட்சுமி ஆகியோர் பேசினர். பின்னர் சாய் பஜனை நிறைவாக மங்கல ஆரத்தி நடந்தது. நாராயண சேவையும் பக்தர்களுக்கு சாமிபடம், பூ, விபூதி, பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் டவுன் பஞ்.,தலைவி ஓவம்மாள், காளிராஜன், எட்டப்பராமன், முருகேசன், பாரத்வெங்கடாசலம் ஆகியோர் பேசினர். ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். பெருமாள்சாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை இளையராஜா, சூரியநாராயணன், முத்துச்சிங்கம் ஆகியோர் செய்தனர்.