தஞ்சை தஞ்சை லட்ச தீபம் திருவிழா: பக்தர்கள் வழிபாடு
ADDED :4436 days ago
தஞ்சாவூர்: தஞ்சை காமாட்சி அம்மன் கோவிலில், கார்த்திகை மாதம், ஒன்றாம் தேதி முதல் லட்ச தீப திருவிழா, வழிபாடு நடந்தது. இதில் தீப ஒளி அலங்காரம் செய்யப்பட்டு, லலிதா சகஸ்ரநாமத்தை பக்தர்கள் படிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், சகஸ்ர நாமத்தை பக்தர்கள் கூட்டாக படித்து, கூட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் கமிட்டியினர், பக்தர்கள் செய்துள்ளனர்.