வீரராகவ பெருமாள் வன போஜன மகோத்சவம்!
ADDED :4369 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு, வன போஜன மகோத்சவம், நேற்று முன்தினம் நடைபெற்றது.இதற்காக, காலை, 7:00 மணிக்கு, கோவிலில் இருந்து வீரராகவ பெருமாள் புறப்பட்டு, டோல்கேட் அருகில் உள்ள, தானப்ப நாயக்கன் மண்டபத்தில் கோசாலையுடன் கூடிய நந்தவனத்தில் எழுந்தருளினார்.காலை, 10:00 மணிக்கு, கோசாலையில் பெருமாள் எழுந்தருளியதும், கோ பூஜை நடந்தது. மாலை, 2:30 மணி வரை பூஜை நடந்தது. பின்னர், கச்சேரியும், மாலை 5:00 மணிக்கு சாற்றுமறையும் நடைபெற்றது.மாலை, 6:00 மணிக்கு, விசேஷ வாத்திய வாண வேடிக்கையுடன் பெருமாள், கோவிலுக்கு திரும்பினார்.